ராஜலட்சுமி சீனிவாசன் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். தனது பணி ஓய்வுக்குப் பின்னரும் அவர் அவ்வை இல்லம் மற்றும் பள்ளியுடன் இணைந்து பொருளாதார ரீதியில் பின்தங்கிய பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த உதவினார். அவரது நினைவாக 2014-ம் ஆண்டு ராஜலட்சுமி சீனிவாசன் நினைவு அறக்கட்டளை (ராஜி அறக்கட்டளை) தொடங்கப்பட்டது. இத்தகைய பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளின் கல்விக்கு உறுதுணையாக இருக்கும் அவரது தொலை நோக்குப் பார்வையையும், பணிகளையும் முன்னெடுத்துச் செல்லவே இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அத்தகைய குழந்தைகளுக்கான பள்ளிகளுடனான எங்கள் பணி அறக்கட்டளைக்கு மிகவும் மதிப்பு நிறைந்ததாகவும் மற்றும் திருப்திகரமான அனுபவமாகவும் உள்ளது.
இந்த அறக்கட்டளையின் முயற்சிகள் பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு இரண்டு நிலைகளில் உதவும் வண்ணம் அமைந்துள்ளன.
முதலாவதாக, பள்ளியில் படிக்கும் போது குழந்தைகளின் பாடத்திட்டம், இணை பாடத்திட்டம் மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்திறனை மேம்படுத்த உதவுதலாகும். இரண்டாவதாக, குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறியவுடன் அவர்கள் விரும்பிய தொழில் அல்லது படிப்புத் திட்டங்களை மேற்கொள்ள உதவுதலாகும். நன்கு அறியப்பட்ட பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் சிறப்பாக செயல்பட அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், சமூக வட்டங்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள் உதவுகிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை வசதி குறைந்த பின்னணியிலிருந்து வரும் பிள்ளைகளுக்கு இல்லாதவையாக இருக்கின்றன. இந்த இடைவெளிகளை நிரப்ப உதவும் நோக்கில், இந்த அறக்கட்டளை பள்ளி நிர்வாகங்கள், அரசு துறைகள், நிதி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், பள்ளி முன்னாள் மாணவர்கள் போன்றவர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
இத்தகைய பின்னணியைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்களின் வாசிப்புத் திறன் ஒரு பெரிய பலவீனமாக இருப்பதால், எங்கள் அறக்கட்டளையானது தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, கன்னடம் மற்றும் ஒரியா போன்ற பல்வேறு மொழிகளில் லேமினேட் செய்யப்பட்ட நான்கு பக்க A-3 அளவிலான விளக்கப்படக் கதை அட்டைகளின் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளது.தமிழில் ‘கதை அருவி’, ஆங்கிலத்தில் ‘எ கேஸ்கேட் ஆஃப் ஸ்டோரிஸ்’ மற்றும் பிற இந்திய மொழிகளில் ‘கதா ஜர்னா’ என்று அழைக்கப்படுகின்றன. 5-15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்த இந்த அட்டைகள் மிகவும் பயனுள்ளதாக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகள் கண்டறிந்துள்ளன. தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து நன்கொடை திரட்டுவதன் மூலம் இந்த அட்டைகளை அரசுப் பள்ளிகளுக்குச் சென்றடைய அறக்கட்டளை முயற்சி செய்கிறது.
பள்ளிகளில் உள்ள ஏழைக் குழந்தைகளின் கல்வியில் எங்கள் கவனம் இருக்கும் அதே வேளையில், பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை கல்வியின் அனைத்து நிலைகளிலும், அம்சங்களிலும் ராஜி அறக்கட்டளை ஆர்வமாக உள்ளது. மேலும் அனைத்து பின்னணியில் உள்ள மக்களுக்கும் பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் மற்றும் மலிவு விலையில் அதை உருவாக்கவும் பாடுபடுகிறது.
ராஜி அறக்கட்டளை என்பது அறங்காவலர் குழுவால் நிர்வகிக்கப்படும் பொதுத் தொண்டு அறக்கட்டளை. மேலும் வருமான வரித் துறையிலிருந்து 80G விலக்கு மற்றும் CSR மானியங்களைப் பெறுவதற்கான தகுதிச் சான்றிதழைக் கொண்டுள்ளது.
அறக்கட்டளையின் ஒரு சிறிய ஆங்கிலம் மற்றும தமிழ் துண்டு பிரசுரம் இங்கே கிடைக்கிறது.