பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கான பள்ளிகளுடன் எங்கள் பணி

எங்கள் அறக்கட்டளையின் நோக்கம் – கல்வி, அதிகாரமளித்தல். பின்தங்கிய பின்னணியில் இருந்து வரும் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்கு ஆதரவளிப்பதில் கூர்மையான கவனம் செலுத்துகிறது. இதை நாம் பார்க்கையில், இந்த நோக்கத்துடன் பள்ளிகளில் தலையீடுகள் பொதுவாக இரண்டு வகைகளாக இருக்கலாம்:

  • பள்ளிகளில் படிக்கும் போது குழந்தைகளின் பாடத்திட்டம், இணை பாடத்திட்டம் மற்றும் கூடுதல் செயல்திறனை மேம்படுத்த உதவுதல்.

  • குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறியவுடன் அவர்கள் விரும்பிய தொழில், பயிற்சி அல்லது படிப்பு திட்டங்களை மேற்கொள்ள உதவுதல்.

பெரும்பாலும் பள்ளிகளில் தன்னார்வ நிறுவனங்கள்,பெரிய தொழில் நிறுவனங்கள் போன்றோரின் தலையீடுகள் முதல் வகையைச் சேர்ந்தவை. ஒப்பீட்டளவில் குறைந்த முயற்சிகள் இரண்டாவது வகை ஆதரவில் இருந்தாலும், தொழில் பயிற்சி நிறுவனங்கள், கல்லூரி கல்விக்கு நிதி அளிக்கும் தொண்டு நிறுவனங்கள் இந்த இடத்தில் செயல்படுகின்றன.

இரண்டாவது வகையான தலையீட்டை பள்ளிகளுடன் முறையாக மேற்கொள்வதற்கான எங்களுடைய முன்மொழிவை குறித்த விரிவான குறிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

சென்னை மண்டலத்தில் உள்ள சில பள்ளிகளுடன் அறக்கட்டளை பின்பற்றிய சில நடவடிக்கைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இது சம்பந்தமான பெரும்பாலான முயற்சிகள், 2003-2013 ஆண்டு வரை திருமதி ராஜலட்சுமி அவர்கள் தனது பணியைத் தொடங்கிய அடையாறில் உள்ள அவ்வை இல்லம் மற்றும் பெண்கள் பள்ளியில் மேற்கொள்ளப் பட்டன.

வகுப்பறைப் பணிகளை நிரப்புதல் மற்றும் துணை நிற்றல்

11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பயிற்சி வகுப்புகள்:

அவ்வை இல்லக் குழந்தைகள் தேர்வுகளில் சிறந்து விளங்குவதற்காக மாலை நேர வகுப்புகள் அறக்கட்டளையால் நடத்தப்பட்டது. டாக்டர் கமலம் பார்த்தசாரதி, டாக்டர் சுஜாதா பாலகிருஷ்ணன், திருமதி என். சாந்தி, திருமதி தீபா கிருஷ்ணமூர்த்தி, திருமதி பிரியா ராம்குமார், டாக்டர் சித்ரா கே. நடராஜன் போன்ற நமது உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இதற்கு உதவினர். அவர்கள் தங்கள் தேர்வுக்குத் தயாராவதற்கு உதவி செய்ததுடன் அவர்களின் தொழில் விருப்பத்தைப் பற்றிய வழிகாட்டுதலையும் வழங்கினோம்.

6, 7 மற்றும் 8ஆம் வகுப்புக்கான பயிற்சி வகுப்புகள்:

2014 முதல் 2016 வரை இரண்டு ஆண்டுகளுக்கு எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தன்னார்வலர்களின் உதவியுடன் அனைத்து வேலை நாட்களிலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை அவ்வை இல்லத்தின் 6,7 மற்றும் 8 வகுப்புகளுக்கு ஆங்கிலம் மற்றும கணிதம் வகுப்புகளை நடத்தினோம். இந்த வகுப்புகளின் நோக்கம் மாணவர்களின் மொழி மற்றும் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துவது மற்றும் கணிதம் கற்றலை மேலும் பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குவதாக இருந்தது. எத்திராஜ் கல்லூரியைச் சேர்ந்த 20 தன்னார்வலர்கள் பங்கேற்று குழந்தைகளுக்கு கற்பித்தனர்.

ஆங்கிலம் மற்றும் கைவினைப் பயிற்சி வகுப்புகள்:

2014-15 ஆம் ஆண்டில், ஒவ்வொரு சனிக்கிழமையும் சேவா சதனின் (Chetpet) விடுதி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்புகள் மற்றும் கதை சொல்லும் அமர்வுகள் மூலம் அவர்களின் தகவல் தொடர்புத் திறன் மற்றும் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தி, கைவினை மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்தினோம். இந்த நிகழ்ச்சிக்கு எங்கள் தன்னர்வலர்கள் டாக்டர் வி. விஜயலட்சுமி, டாக்டர் பகவதி, திருமதி அன்னபூரணி சங்கர், மற்றும் திருமதி என். சாந்தி ஆகியோர் உதவினார்கள்.

ஆங்கிலம் மற்றும் மென்திறன் வகுப்புகள்:

அவ்வை இல்லத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் தேர்வுகளுக்குப் பிறகு ஏப்ரல் - மே 2014 முதல் 2017 வரை, அவர்களின் தகவல் தொடர்பு மற்றும் மென் திறன்களை மேம்படுத்தி,அதன் மூலம் உயர் படிப்பு அல்லது வேலைவாய்ப்பிற்கு அவர்களை தயார்படுத்த 15 நாள் தினமும் 3 மணி நேரம் பயிற்சியை இந்த அறக்கட்டளை நடத்தியது. திருமதி ஸ்ரீலா கௌசிக் பாடத்திட்டத்தின் உள்ளடக்கத்தை வடிவமைத்தார், மேலும் திருமதி ஸ்ரீலா கௌசிக், திருமதி ரஞ்சனி வர்தன், திருமதி அன்னபூர்ணி சங்கர் மற்றும் திருமதி என்.சாந்தி ஆகியோரால் வகுப்புகள் நடத்தப்பட்டன.

பள்ளி நூலகங்களை அமைத்தல்

அக்டோபர் 2015 இல் TVR உயர்நிலைப் பள்ளியில் உள்ள நூலகத்தை பழைய வளாகத்தில் இருந்து புதிய வளாகத்திற்கு மாற்ற உதவினோம். எங்கள் அறக்கட்டளை புதிய வளாகத்தில் நூலகத்தை வடிவமை, வகைப்படுத்தி, ஏற்பாடு செய்துள்ளது. அறக்கட்டளையைச் சேர்ந்த திருமதி சாந்தி அவர்கள் 2015 ஆம் ஆண்டு முதல் அவ்வை இல்லத்தில் நூலகத்தை நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கதை சொல்லும் அமர்வுகள்

அறக்கட்டளையானது TVR உயர்நிலைப் பள்ளி மற்றும் அவ்வை இல்லத்தின் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான கதை சொல்லும் அமர்வுகளை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தன்னார்வலர்களின் உதவியுடன் ஏற்பாடு செய்தது. மாணவர்களுக்காக டாக்டர் சந்தியா ரூபனுடன் கதை சொல்லும் அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எத்திராஜ் கல்லூரியின் தன்னார்வலர்களுக்கு திரு.குமார் அவர்களின் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவ்வை இல்ல மாணவர்களுக்கான வினாடிவினா

கொரொனா பெருந்தொற்று முடக்க காலத்தில், RSMF ஒவ்வொரு வாரமும் அவ்வை இல்ல மாணவர்களுக்காக ஆன்லைனில் பொது வினாடி வினா மற்றும் கணித வினாடி வினாக்களை நடத்தியது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

தொழிற்கல்வி மற்றும் நிறுவனங்கள் குறித்த அறிக்கை

எங்கள் அறக்கட்டளை நமது சமூகத்தின் நலிந்த பிரிவு மாணவர்களுக்கான தொழில் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதலின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது. சென்னை மண்டலத்தில் தொழிற்கல்வி மற்றும் கல்வி நிறுவனங்கள் குறித்த விரிவான அறிக்கை தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை நமது முன்னாள் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு தீபக் அவர்கள் மேற்கொண்டார். இப்பணியை விரிவுபடுத்துவதுடன், பள்ளிகள் மற்றும் இதர பங்குதாரர்களுடன் அவற்றை இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளுக்கான விடுதிக் கட்டணம்

எங்கள் அறக்கட்டளை பள்ளியைத் தாண்டி அவர்களின் கல்விக்கு உதவுவதன் மூலம் மற்றும் ஆதரவளிப்பதன் மூலம் நலிந்த பின்னணியில் இருந்து வரும் மாணவிகளுக்கு அதிகாரம் அளிக்க செயல்படுகிறது. சில மாணவர்களுக்கு கல்லூரி படிக்கும் காலத்தில் பொருத்தமான விடுதியில் தங்குவதற்கு நிதி உதவி தேவைப்படுகிறது. நமது அறக்கட்டளை கடந்த மூன்று ஆண்டுகளாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பின்னணியில் உள்ள ஒரு சில சிறந்த மாணவர்களின் விடுதிக் கட்டணங்களை ஏற்று, அவர்கள் கல்லூரிக் கல்வியை முடித்து, பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற வழிவகை செய்து வருகிறது. மேலும், இந்த மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் தொழில் வழிகாட்டுதல்களை வழங்கி, அவர்களுக்கு வழிகாட்டுகிறது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சுயசரிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு

அவ்வை இல்லத்தின் நிறுவனர், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சுயசரிதை 1964 - ல் ஆங்கிலத்தில் முதலில் பிரசுரிக்கப்பட்டது. இந்த புத்தகம் டாக்டர் ரெட்டியின் பன்முக மற்றும் வளமான வாழ்க்கையின் உண்மையான பதிவு . டாக்டர் ரெட்டி எழுதிய இந்த நூலில் தனிநபர், குடும்பம், தொழில்முறை, அறிவியல், கல்வி, சமூகம், கலாசாரம், அரசியல் என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. ஒரு நபரின் கதை என்று விவரிக்கப்பட்டாலும், இந்த புத்தகம் ஆறு தசாப்தங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலப்பகுதியில் பரவிய நிகழ்வுகள், ஆளுமைகள், உறவுகள், நிறுவனங்கள் மற்றும் இயக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த முக்கியமான படைப்பின் தமிழ் மொழியாக்கம் 2012-13 ஆம் ஆண்டில் பேராசிரியர் எஸ்.ராஜலட்சுமி அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அவ்வை இல்லமும் எங்கள் அறக்கட்டளையும் இணைந்து Cre-A பதிப்பகங்களின் ஆதரவுடன் 30 ஜூலை 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

கதை அட்டைகள் வெளியீடு

பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளின் வாசிப்பு மற்றும் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, எங்களால் பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள கதை அட்டைகள் பற்றி இங்கே விவரிக்கப்பட்டுள்ளது.


எங்கள் பெல்லோஷிப் திட்டம்

அறக்கட்டளையின் வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவர்களின் பாடத்திட்ட மற்றும் இணை/கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளில் உதவ தன்னார்வலர்களாக பணியாற்ற விரும்பும் கல்லூரி மாணவர்களுக்காக ஒரு மாணவர் பெல்லோஷிப் திட்டத்தை அறக்கட்டளை தொடங்கியுள்ளது. விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.

திரும்பிச் செல்