ஒரு குறிப்பு

பொருளாதார ரீதியாக பின் தங்கிய குழந்தைகளுக்கான பள்ளிகளுடன் பணியாற்றுதல்

சுருக்கம்: பள்ளிகளை விட்டு வெளியேறும் மாணவர்களின் உயர் படிப்புகள் மற்றும் தொழில் பாதைகள் இரண்டு முக்கிய காரணிகளால் வலுவாக பாதிக்கப்படுகிறது: (i) பள்ளிகள் எந்த அளவுக்கு மாணவர்களை பாடத்திட்டம், கூடுதல் மற்றும் இணை பாடத்திட்டம் மூலம் தயார் செய்துள்ளன (ii) அவர்கள் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள், முன்னாள் மாணவர்கள், சமூகம் ஆகியோரிடமிருந்து பெறும் வழிகாட்டுதல் மற்றும் உதவி . பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கான பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் இந்த இரண்டு அம்சங்களிலும் பாதிக்கப்படுகின்றனர். இந்த குறிப்பு முதன்மையாக அத்தகைய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு (ii) ஆதரவை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. அத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவர்கள, தேர்ச்சி பெற்றவுடன், அவர்கள் விரும்பிய படிப்பு, பயிற்சி அல்லது வேலை போன்ற திட்டங்களைப் பின்பற்றும் நிலையினை உறுதி செய்கிறது.

உள்ளடக்கம்:

I.    பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களின் பள்ளிகளில் தலையீடு
II.   தற்போதைய நிலைமை
III.  தற்போதைய முன்மொழிவு
IV.  முன்மொழிவின் சில சிறப்பு அம்சங்கள்

I. பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களின் பள்ளிகளில் தலையீடு

அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தன்னார்வல தொண்டர்கள், சமூகப் பொறுப்பு நிதி போன்றவை பொருளாதார மற்றும் சமூக ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கான பள்ளிகளுடன் இணைந்து செயல்படுகின்றன:

  1. குழந்தைகளான வகுப்பறை / வளாக செயல்முறைகளை மேம்படுத்த உதவுதல் - வகுப்பறைகளில் பாடங்கள் கற்பித்தல்/கற்றல், ஆய்வகம்/நூலகம/கணினி திறன், எழுத்து / பேச்சுத் திறன் (ஆங்கிலத்தில் உட்பட), விளையாட்டுகள், கலை, கலாசார நிகழ்ச்சிகள், இசை / ஓவியம் / கலைகள் மற்றும் பிற படைப்பு நடவடிக்கைகள், சுகாதாரமும் ஆரோக்கியமும், பொது அறிவும் விழிப்புணர்வு போன்றவை. பொதுவாகப் பெரும்பாலான பள்ளிகளில் பாடத்திட்டம் / இணை பாடத்திட்டம் / கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் அவை வசதிகள், வளங்கள், காலம், மனித சக்தி கிடைப்பதைப் பொறுத்து (பெரும்பாலும் அவற்றில் சில மட்டுமே) பல்வேறு அளவுகளில் திருப்திகரமாக நிறைவேற்றப்படுகின்றன. இவற்றுள் கடைசிக் கூறு (மனித ஆற்றல், குறிப்பாக ஆசிரியர்கள்) மிகவும் முக்கியமானதாகும். இது பெரும்பாலும் எதிர்பார்க்கப்படும் நிலைப்பாட்டிலிருந்து குறைவாக உள்ளது - அவர்களின் எண்ணிக்கை, அவர்களின் தரம், அவர்களின் பணி நிலைமை, அவர்களின் ஊக்கம் மற்றும் அர்ப்பணிப்பு போன்றவை.
    இதுபோன்ற பள்ளிகளுடன் பணிபுரிபவர்கள், பள்ளிகளில் தற்போது நடைபெற்று வரும் நடைமுறைகளுக்கு உறுதுணையாக/நிறைவாக இருக்க முயற்சிக்கின்றனர். அத்துடன் அவை இல்லாத இடங்களில் தங்கள் சொந்த ஆணை,நோக்கங்கள்,எல்லை,வளங்கள்,புரிதல் ஆகியவற்றைப் பொறுத்து, வெவ்வேறு அளவுகளில் சிலவற்றை அறிமுகப்படுத்துகின்றனர். அவர்களின் தலையீட்டின் நிலை,அளவு, மற்றும் செயல்திறனைப் பொறுத்து, அவர்கள் பள்ளியின் பாடத்திட்டம், இணை பாடத்திட்டம் மற்றும் கூடுதல் பாடத்திட்ட இலக்குகளை அடைய கணிசமாக உதவுகின்றனர்.

  2. பள்ளிக்குள் பாடத்திட்டம் / இணை / கூடுதல் பாடத்திட்டம் என்பவற்றைத் தாண்டி, மாணவர்களைப் பள்ளிக்கு அப்பால் வாழ்க்கைக்குத் தயார்படுத்த உதவுகிறோம். இந்த அம்சம் இரண்டு பரந்த கூறுகளைக் கொண்டுள்ளது:

    • (a) பள்ளியை விட்டு வெளியேறிய பின்னர் மாணவன் விருப்பம் என்ன என்பது குறித்து சில யோசனைகளை உருவாக்க உதவுகிறோம். - உயர் படிப்புகளில் (பொறியியல் போன்ற தொழில்முறை திட்டங்கள், சட்டம், மருந்தகம் முதலியன, அல்லது கலை மற்றும் அறிவியல் துறையில் பட்டம் ), அல்லது தொழில் பயிற்சித் திட்டங்கள் , அல்லது சில வேலைகளை (முறையான துறை அல்லது முறைசாரா துறை) எடுத்துக் கொள்வது, அல்லது குடும்பத்தை நடத்துவதற்கான பொறுப்பை ஏற்பது போன்றவை. பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறிய பின்னர், அவர்கள் தேர்வு செய்த திட்டத்திற்காக தங்களைத் தயார்படுத்திக் கொள்ள உதவுவதன் மூலம் இது பின்பற்றப்பட வேண்டும். சாதாரண முறையில், இதுபோன்ற பின்னணியைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் இறுதித் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இந்தப் பிரச்சினையைப் பற்றி யோசிப்பதில்லை - அதற்குள் தொழில் / உயர் படிப்பு சந்தையில் நிலவும் கடுமையான போட்டி காரணமாக இது சிரமம் ஆகி விடுகிறது. இது தீர்க்கப்பட வேண்டிய சவால்.

    • (b) மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறியவுடன், பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் தங்களைத் தயார்படுத்திக் கொண்ட அவர்கள் விரும்பும் திட்டங்களில்/வேலைகளில் சேர உதவுதல். இதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது தன்னார்வலர்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் முன்னாள் மாணவர்களுடன் இணைந்து சாத்தியமான வேலையளிப்பவர்கள்,பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள், நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள் ஆகியோரைப் பற்றி விரிவான தரவுத்தளம் / வலைப்பின்னல் உருவாக்க வேண்டும். மாணவர் தன் திறமை, தயார்நிலை, கட்டுப்படியாகும் திறன் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, தனக்கான வாய்ப்புகளை எங்கு கண்டடையலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதுபோன்ற பள்ளிகளைச் சேர்ந்த ஒரு மாணவனின் அனைத்து தயாரிப்புகளும் பொதுவாக பள்ளி இறுதித் தேர்வுகளுக்கு தயாராகுவதைத் தாண்டிச் செல்வதில்லை - இங்கு சந்திக்க வேண்டிய சவால் உள்ளது.

(2) (a) மற்றும் (b) ஆகிய இரண்டு கூறுகளையும் செயல் படுத்துவதற்கு, மாணவர்கள் பத்தாம் வகுப்பு முதல் பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு தங்களது அடுத்த படிப்பு, பயிற்சி அல்லது வேலைக்கு செல்லும் வரை மாணவர்கள்,பள்ளி, அவர்களின் பெற்றோர், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆகியோருடன் சேர்ந்து ஆழமான ஈடுபாட்டுடன் பணி புரிய வேண்டும். உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள், அரசுத் துறைகள், பெருநிறுவன அமைப்புகள், கல்வி உதவித்தொகை, உதவித்தொகை மற்றும் நிதி உதவி வழங்கும் தொண்டு நிறுவனங்கள், மாணவர்களை வேலைக்குச் சேர்க்கும் திறன் வாய்ந்த நிறுவனங்கள், ஏற்கனவே நல்ல வேலையில் உள்ள முன்னாள் மாணவர்கள் ஆகியோரைக் கொண்ட கூட்டுறவை உருவாக்க வேண்டும். இது போன்ற பள்ளிகளுடன் ஈடுபடும் போது முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் முக்கிய குறிக்கோள் பள்ளிக் கல்வி, மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்றவுடன் உடனடியாகவோ அல்லது அதிகபட்சம் 2-3 வருட படிப்புக்குப் பிறகோ வேலை பெற உதவ வேண்டும். இந்த அம்சம் நன்கு அறியப்பட்ட பள்ளிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் முன்னேறிய பின்னணியில் உள்ள குழந்தைகளின் விஷயத்தில் இருந்து கணிசமாக வேறுபட்டதாக இருக்கும்.


II. தற்போதைய நிலைமை

வசதி படைத்த பள்ளிகள் 1 மற்றும் 2 என்று இந்த இரண்டு செயல்முறைகளையும் கொண்டிருக்கின்றன -அவை பள்ளியில் சிறப்பாகச் செயல்படவும், பள்ளியை விட்டு வெளியேறியவுடன் நன்கு வரையறுக்கப்பட்ட படிப்பு/தொழில் பாதையில் செல்லவும் உதவுகின்றன. முதல் பகுதி (1) பள்ளியிலேயே அதிக வெளிப்புற ஈடுபாடு இல்லாமல் ஓரளவு நல்ல முறையில் செய்யப்படுகிறது. அதே சமயம் இரண்டாம் பகுதி (2) பொருளாதாரத்தில் முன்னேறிய பின்னணியில் உள்ள பெரும்பாலான மாணவர்களுக்கு பக்கபலமாக உள்ள அவர்களுடைய பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், மூத்தவர்கள், ஆசிரியர்கள், அயலவர்கள், தொடர்புகள், சமூகம் போன்றவர்கள் மூலம் கவனித்துக் கொள்ளப்படுகிறது.

பெரும்பாலும், பொருளாதார ரீதியாக பின் தங்கிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெற்றிகரமான வாழ்க்கையை உறுதி செய்வதில் பள்ளி செயல்முறையின் முக்கியத்துவம் (1) மிகைப்படுத்தப்பட்டுள்ளது. வெளிப்புற ஆதரவு அமைப்பின் முக்கியத்துவம் (2) போதுமான அளவில் பாராட்டப்படவில்லை. பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்கள் மற்றும் அவர்கள் படிக்கும் பள்ளிகள் 1 மற்றும் 2 ஆகிய இரு நிலைகளிலும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வெளிப்புற ஆதரவு தேவைப்படுகிறது. பள்ளிச் செயல்பாட்டில் உதவுவதோடு, பொருளாதாரத்தில் முன்னேறிய பின்னணியில் உள்ள குழந்தைகளுக்கு உள்ள ‘இயற்கை’ ஆதரவு அமைப்பு போல், நலிந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அதே போல் ஆதரவு அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.</em>

பல ஆண்டுகளாக நடந்து வரும் முயற்சிகளின் காரணமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய பின்னணியில் இருந்து வரும் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு ஒரு நல்ல பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம் (மேலே 1இல் பட்டியலிடப்பட்டவைகளை உள்ளடக்கியது) பற்றிய விழிப்புணர்வு இன்று பரவலாக உள்ளது. பள்ளிகளைத் தவிர மற்ற நிறுவனங்கள் உதவ முயற்சிக்கின்றனர். இத்துறையில் அரசு சாரா நிறுவனங்கள்(வெளிநாட்டில் இருந்து ஆதரவளிக்கப்பட்டவை உட்பட) அதிக எண்ணிக்கையில் செயலில் உள்ளன; பெருநிறுவன சமூக பொறுப்பின் (CSR) பெரும் பகுதி பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் பயிலும் பள்ளிகளை ஆதரிப்பதில் செலவிடப்படுகிறது; மதம், சமூகம், மொழி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் இந்தத் துறையில் மிகவும் தீவிரமாக உள்ளன; பெரு நிறுவனத்தைச் சார்ந்த பல பணக்காரர்களும் (HNIs) இந்த காரணத்திற்காக பங்களிக்க தயாராக உள்ளனர்; பல சிறிய தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் அமைக்கப்பட்ட அறக்கட்டளைகளும் இந்தத் துறையில் செயல்படுகின்றன; குறைந்தபட்சம் பெருநகரங்கள் மற்றும் நகர்ப்புற மையங்களில், நன்கு நிர்வகிக்கப்படும் பள்ளி, கழிவறைகள் கட்டுவதற்கும், ஆய்வகங்கள் அமைப்பதற்கும், உபகரணங்கள் வாங்குவதற்கும், உதவித்தொகை வழங்குவதற்கும் நிதி உதவி பெற விரும்பினால், அதற்கு உதவக்கூடிய நிறுவனத்தை/அமைப்பைக் கண்டறிய முடியும்.

ஆனால் நகர்ப்புற மையங்களில் கூட, இரண்டாவது செயல்முறை ( 2) கதை முற்றிலும் வேறுபட்டது, அதாவது - பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, மாணவர் தனது தகுதிகள் மற்றும் திறன்களுக்கு ஏற்ற படிப்பு/தொழில் பாதையில் சேர்வது மற்றும் தேர்ச்சி பெற்ற 2-4 ஆண்டுகளுக்குள், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வசதியுள்ள குடிமகனாக மாறுவது. வெளியில் உள்ள பரந்த உலகிற்கு மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பாலமாகச் செயல்படும் பிரதான இலக்குடன் பள்ளிகளுடன் ஈடுபடும் அமைப்புகள் அதிகம் இல்லை. இந்த வகையான தலையீடுகள் இருந்தாலும் கூட, அவை ஒரு சில மாணவர்களுக்கு சில வேலை வாய்ப்பு உதவிகளுடன், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையான தொழிற்பயிற்சியை ஏற்பாடு செய்வதைத் தாண்டி பெரும்பாலும் செல்வதில்லை. “மூன்று ஆண்டுகளில், இப்பள்ளியில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, நூறு சதவிதம் வேலை வாய்ப்பு கிடைக்கச் செய்ய வேண்டும்!’’ என, யாரும் இலக்கு நிர்ணயிப்பதில்லை. இந்த வகையான தலையீடுகள், பள்ளி ஒரு நிறுவனமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களின் குடும்ப பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு மறைமுகமாக உதவுவது என்பது இறுதி இலக்காக இருக்க வேண்டும்.மாறாக இத்தகைய பின்னணியில் இருந்து வந்த ஒரு மாணவன், தலையீடு இருந்தோ, இல்லாமலோ, படிப்பு மற்றும் வாழ்க்கையில் பெறும் பெரிய வெற்றி, பெரிதாக போற்றப்பட்டாலும் இது தலையீடுகளின் இலக்கு இல்லை. இந்த வகை தலையீடுகள் (2 a மற்றும் b) மிகவும் அரிதானவை என்பதற்கான ஒரு காரணம், அவை பள்ளிகளுடன் மாணவர்களும், பெற்றோரும் மட்டுமின்றி, பல நிறுவனங்களும், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் நீண்ட கால அடிப்படையில் தொடர்ச்சியான ஈடுபட வேண்டி இருக்கிறது. இரண்டாவதாக, “பல மாணவர்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்பட்டது”, அல்லது “பல மாணவர்களுக்கு கல்லூரி படிப்புக்கான உதவித்தொகை வழங்கப்பட்டது”, போன்றவற்றைப் போலல்லாமல், இத்தகைய அணுகுமுறையின் சாதனைகள், கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஈர்க்கக்கூடிய விளக்கப்படங்கள் மற்றும் அறிக்கைகளை உருவாக்குவது கடினம். யாரும் மூன்று ஆண்டுகளில் இந்த பள்ளியில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கு 100 சதவீதம் ‘வேலை’ இருக்க வேண்டும் , அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த பள்ளிகளிலிருந்து தலா இரண்டு மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர வேண்டும், அல்லது ஐந்து ஆண்டுகளில் இந்த பள்ளிகளின் முன்னாள் மாணவர்களில் இருவர் யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது போன்ற இலக்குகளை நிர்ணயிப்பதில்லை. (ஒரு ஐ.ஐ.டி., எம்.பி.பி.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., என்று அரை நூற்றாண்டுகளில் ஒரு வேட்பாளரைக்கூட உருவாக்காத பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்கள் பயிலும் பள்ளிகள் சென்னையிலேயே அதிகம் இருக்கும் - இது பள்ளி மற்றும் அதன் ஆசிரியர்களின் மன உறுதி மற்றும் சுயமரியாதைக்கு என்ன செய்யும் என்பதை கற்பனை செய்வது கடினமாக இருக்கக்கூடாது!).

III. தற்போதைய முன்மொழிவு

பள்ளிக் கல்வியினை முடித்த பின்னர் கல்வி/பயிற்சி/வேலைவாய்ப்புப் பாதைகளில் செல்வதற்கு பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்களை தயார்படுத்த, அதில் ஈடுபடும் அனைத்து அமைப்புகளின் விரிவான கூட்டமைப்பு ஏற்படுத்தப் பட வேண்டும் -. அவை பள்ளி நிர்வாகம், மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர், வேலைக்கு அமர்த்த கூடியவர்கள், தொழில் பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள், அரசு துறைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள், பெரும் தொழில் நிறுவனங்கள், மற்ற அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவை ஆகும். இதன் இலக்கு சம்பந்தப்பட்ட பாடசாலைக்கும்,மாணவர் சேர்க்கை, நிதி, வேலை வாய்ப்பு போன்றவற்றை வழங்கக்கூடிய ஏனைய நிறுவனங்களுக்கும், தகுதியுள்ள மாணவர்களுக்கும் இடையில் நீண்டகால உறவுகளை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அவர்களின் தனிப்பட்ட திறமைகள், திறன்கள் மற்றும் தொழில்/உயர் படிப்பு விருப்பங்களைப் புரிந்துகொள்வதற்கும், அவர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவர்களுடைய எதிர்காலத்தை எதிர்கொள்ள உதவுவதற்கும் அவர்களின் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளின் போது மாணவர்களுடன் (மற்றும் அவர்களின் பெற்றோர்/பாதுகாவலர்களுடன்) நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும்.

கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.




கூடுதல் பயிற்சியின் மூலம் மாணவர்கள் தேர்வில் சிறப்பாகச் செயல்பட உதவுவதும், அவர்களின் பொது அறிவு மற்றும் விழிப்புணர்வு, தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்புத் திறன்கள் போன்றவற்றை மேம்படுத்துவதும் இதில் அடங்கும்—ஏற்கனவே பல அரசு சாரா நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன. இங்கு முன்மொழியப்பட்டுள்ளவற்றில் புதிய கருத்து, ஒரு கூட்டமைப்பைக் உருவாக்குவதும் நிலைநிறுத்துவதும் ஆகும். இது மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொண்டு, அவர்களின் திறமைகள், திறன்கள் மற்றும் விருப்பத்திற்கேற்ற பாதையில் செல்வதை உறுதிசெய்கிறது.இதற்கு அவர்களுக்கு , பலதரப்பட்ட பின்னணிகள் மற்றும் தொடர்புகளை கொண்ட நபர்களின் ஆதரவும் ஈடுபாடும் தேவை. அதிர்ஷ்டவசமாக இன்றைய உலகில், வலைப்பின்னலின் ஆற்றல் தேசிய மற்றும் உலகளாவிய நிறுவனங்களில் உள்ள வெற்றிகரமான தொழிலைத் தொடரும் எவருக்கும் நன்கு தெரியும். அவர்கள் அனைவரும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உதவ முடியும்.

இந்த முன்முயற்சிகள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அவர்களை மேலே கொண்டு செல்ல உதவும் கூட்டமைப்புகள் மற்றும் ஆதரவு இல்லாத பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இழப்பீடு வழங்கும் முயற்சியாக கருதப்பட வேண்டும், பொருளாதாரத்தில் முன்னேறிய பின்னணியிலிருந்து வரும் பிள்ளைகளின் விஷயத்திலும் இது நடக்கிறது.

IV. முன்மொழிவின் சில சிறப்பு அம்சங்கள்

இந்த முயற்சி பதினொன்றா வகுப்பிலிருந்து தொடங்க வேண்டும். அவர்கள் தங்கள் பள்ளி இறுதித் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்படுவதையும், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளின் முடிவில் அவர்களுக்குத் தகுந்த உயர் படிப்புகள், தொழிற்கல்வி படிப்புகள் அல்லது வேலைவாய்ப்பு பெறுவதையும் பார்ப்பதே குறிக்கோளாக இருக்கும்.

இதைத் தொடங்குவதற்கு முன்பாக விரிவான திட்டங்கள், செயல்திட்டங்கள், காலவரையறைகள், வரவு செலவு போன்றவற்றை உருவாக்க வேண்டும்.

சிறந்த புரிதலும் தெளிவும் பெற அதன் சில கூறுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

  1. ஒருவர் ஆரம்பத்தில் ஈடுபட விரும்பும் பள்ளிகளைக் கண்டறிந்து, அவற்றின் நிர்வாகங்கள், பெற்றோர்கள் சங்கங்கள் போன்றவற்றுடன் கலந்துரையாடல் நடத்தவும்; திட்டத்தின் வெற்றிக்கு பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்பு அவசியம்.

  2. முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வேலை விவரம் மற்றும் நிலை பற்றிய அனைத்து சாத்தியமான தரவுகளையும் சேகரிக்கவும். இது நிலவரம் எப்படி உள்ளது என்று காட்டும். நம் பணிக்கான அடிப்படைக் குறிப்புத் தரவை உருவாக்கும். மேலும் இந்த ‘வேலை விவரம்’ என்பது பள்ளிகளுடனான எங்கள் பணியின் இறுதி இலக்காகும். மாணவர்களுடனும் நிர்வாகத்துடனும் இந்தத் தரவுத் தளத்தைப் பகிர்வது, தற்போதைய மாணவர்கள் தேர்ச்சி பெறும்போது தங்களுக்கான யதார்த்தமான இலக்குகளை அமைத்துக் கொள்ளவும், அவர்களின் மூத்தவர்களை விட சிறப்பாகச் செய்யவும் அவர்களை ஊக்குவிக்கும்.

  3. முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வேலை விவரம் மற்றும் நிலை பற்றிய அனைத்து சாத்தியமான தரவுகளையும் சேகரிக்கவும். இது நிலவரம் எப்படி உள்ளது என்று காட்டும். நம் பணிக்கான அடிப்படைக் குறிப்புத் தரவை உருவாக்கும். மேலும் இந்த ‘வேலை விவரம்’ என்பது பள்ளிகளுடனான எங்கள் பணியின் இறுதி இலக்காகும். மாணவர்களுடனும் நிர்வாகத்துடனும் இந்தத் தரவுத் தளத்தைப் பகிர்வது, தற்போதைய மாணவர்கள் தேர்ச்சி பெறும்போது தங்களுக்கான யதார்த்தமான இலக்குகளை அமைத்துக் கொள்ளவும், அவர்களின் மூத்தவர்களை விட சிறப்பாகச் செய்யவும் அவர்களை ஊக்குவிக்கும்.

  4. மாணவர்களுக்கு வழங்குவதற்கு வெவ்வேறு கேள்வித்தாள்களைத் தயாரித்து, அதன் மூலம் அவர்களின் தொழில் நலன்கள், திறமைகள், முயற்சிகள், பலம் மற்றும் பலவீனங்கள், குடும்பம் மற்றும் நிதிப் பின்னணி போன்றவற்றைப் பற்றிய விரிவான தகவல்கள் சேகரிக்கப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு பக்கம் உருவாக்கப்படும். நேரம் செல்ல செல்ல தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.

  5. காலப்போக்கில் மாணவர்களை அவர்களுடைய நோக்கத்திற்கு ஏற்றவாறு குழுக்களாக பிரிக்கலாம். (i) உயர் படிப்புகள் (BE/B.Sc./ BA/ B. Com/B.C. A/ B. Pharma………); (ii) தொழில் பயிற்சி (செவிலியர்/ஐடிஐ/ தையல்/சமையல்/அழகு நிபுணர்/ விருந்தோம்பல்/விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்/கைவினைகள்/ பிளம்பிங்/ தச்சு/மின் கம்பி வேலை/ கணினி மற்றும் கைபேசி பழுது பார்த்தல் /கணினி அச்சு கோப்பகம்(DTP)); (iii) உடனடி வேலைவாய்ப்பு, (iv) மற்றவை.

  6. சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு, வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்ச்சி பெற்ற பிறகு தங்கள் தொழில் இலக்குகளை அடைய தங்களைத் தயார்படுத்திக் கொள்ள என்ன ஆதரவு தேவை என்று தீர்மானிக்க வேண்டும்.- கற்றல் பொருட்கள், கூடுதல் பயிற்சி, வழிகாட்டுதல், சொற்பொழிவுகள், அவர்கள் தேர்ந்தெடுக்கும் தொழில்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள பயணங்கள் மற்றும் வெளிபாடுகள், அத்தகைய தொழிலைத் தொடரும் மூத்தவர்களுடன் தொடர்புகொள்வது, உயர் படிப்புகளுக்கான நிதி உதவித் தேவைகளைத் திரட்டுதல் போன்றவை. திரட்டப்பட வேண்டிய அனைத்து ஆதரவையும் உள்ளடக்கிய ஒரு விரிவான ஆவணம் இந்த வகுப்பு மாணவர்களுக்குத் தயாரிக்கப் பட வேண்டும்.

  7. மேலே குறிப்பிட்டுள்ள ஆவணத்தின் அடிப்படையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தேர்தெடுக்கப்பட்ட வகுப்பிற்குத் தேவைப்படும் ஆதரவிற்காக மேலே (3) இல் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டு அவர்களுடய ஆதரவை உறுதி செய்ய வேண்டும். இந்த ஆதரவில் படிப்பு அல்லது பயிற்சி திட்டங்களில் சேருவதற்கான சலுகைகள், வேலை வாய்ப்புகள், கட்டணங்கள் மற்றும் பிற செலவுகளைச் சந்திப்பதற்கான உதவித்தொகைகள்/ஸ்காலர்ஷிப்கள், வழிகாட்டுதல் போன்ற ஆதரவும் அடங்கும்.

  8. ஒவ்வொரு பள்ளிக்கும் தன்னார்வலர்கள் குழு ஒன்றைத் திரட்டி (7) ல் உள்ளவாறு கூட்டமைப்பின் மூலம் வழங்கப்பட்ட ஆதரவின் உதவியுடன் மாணவர்களுக்குத் தேவையான பயிற்சியையும், வழிகாட்டுதலையும் மேலே (5) இல் உள்ளவாறு அவர்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த முயற்சி பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக இருக்கும்.இதன் மூலம் ஒவ்வொரு தனிப்பட்ட மாணவர் மீதும் கவனம் செலுத்தப்பட்டு, பன்னிரெண்டாம் வகுப்பின் முடிவில் அவர்கள் விரும்பிய படிப்போ,வேலையோ கிட்டும்.

  9. சில சந்தர்ப்பங்களில், மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பிறகும், அவர்களின் புதிய படிப்பு மற்றும் வேலை தொடங்கிய பிறகும், வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு இன்னும் சில காலத்திற்கு, ஒரு வேளை மேலும் ஆறு மாதங்களுக்கு தொடர வேண்டி இருக்கலாம்.

  10. இரண்டாம் ஆண்டில், ஒரு புதிய பதினொன்றாம வகுப்பும், இப்போது பன்னிரெண்டாம் வகுப்பில் இருக்கும் பழைய பதினொன்றாம வகுப்பும் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது எந்த நேரத்திலும், முதல் ஆண்டு தவிர, ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு வகுப்புகள் கையாளப்படும் - பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் இருந்து தலா ஒரு வகுப்பு.

திரும்பிச் செல்